தமிழ்நாட்டில் சட்டமன்றம்,
இந்திய
நாடாளுமன்றம்,
உள்ளாட்சி
அமைப்புகள்
போன்றவற்றுக்கு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.இந்த தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்
நடத்தப்படுகிறது.தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலாகிய சட்டமன்ற தேர்தல் வருகிற மே மாதம்
நடைபெற உள்ளது அதில் போட்டியிட்டு வெற்றி பெற பல்வேறு கட்சிகள் தங்களை தயார்படுத்தி
வருகின்றன.
இதனிடையே தேர்தலில் திமுக,அதிமுக,பாமாக,மக்கள்
நல கூட்டணி,ஆகிய கட்சிகள் என நான்கு வகையாக வரும் தேர்தல் களம் காண்கிறது.தேமுதிக,பாஜாக,யாருடன்
கூட்டணி வரும் என பெறும் எதிர்பார்க்கப்ப்டுகிறது.குறிப்பாக அதிமுகவை தவிர தேமுதிகாவை
இழுக்க எல்லா கட்சிகளும் முனைப்புடன் செயல்ப்பட்டுவருகின்றன.நாள்தோரும் அரசியல் கட்சி
தலைவர்கள் விஜயகாந்தை சந்தித்துவருகின்றனர்.
மேலும் திமுகாவின் பொருளாலர்
மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே என்ற பிரச்சாரத்தின் மூலம் பல்வேறு ஊர்களுக்கு சென்று பிரச்சாரம்
செய்தார்.அதேபோல் பாமாகவும் பல்வேறு மாவட்டங்களில் மாற்றம் முண்ணேற்றம் என்ற தலைப்பில்
பிரச்சாரம் மற்றும் மாநாடு நடத்தினார்கள்.மக்கள் நல கூட்டணியும் பிரச்சாரத்தை துவங்கவுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பெரும்
மழை பெய்தது அதனை வைத்து அதிமுகவுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.குறிப்பாக
ஜல்லிகட்டு பிரச்சனையில் அதிமுக அரசு சரியான முறையில் கையாலவில்லை என்றும் எதிர் கட்சிகள்
பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இதனிடையே தனித்து போட்டியிடுவாதாக அறிவித்த அதிமுக பொதுச்செயலாளர்
ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் சரியான முடிவு எடுப்பேன் என்று அதிமுக செயற்குழு கூட்டத்தில்
அறித்தார்.இதனால்மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் பிரச்சாரத்தை
துவங்கியுள்ளார்.இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சிகளான
திமுக,அதிமுக பல்வேறு முனைப்புகளுடன் செயல்பட்டுவருகின்றன. இதனிடையே அதிமு, பாமாக மற்றும்
திமுக போன்ற கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
எனவே வரும் தேர்தலில் யார்
யார் கூட்டணி அமையும் மற்றும் யார் வெற்றி பெறுவார்கள் என்பது பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்
